Quantcast
Channel: Warrior
Viewing all articles
Browse latest Browse all 254

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்...!

$
0
0

தமிழ் இணைய வெளிக்குள் உலாவும் அத்தனை பேருக்கும் கேபிள் சங்கரைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை அதுவும் வலைப்பதிவர்களுக்கு எல்லாம் கிட்டத்தட்ட அவர் பீஷ்மர் மாதிரி. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தொடர்ச்சியாய் தனது உணர்வுகளை சமூகம் பற்றிய பார்வைகளை அவர் பதிவு செய்யாமல் இருந்ததே இல்லை. ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது சாதரணமான வேலை இல்லை என்றாலும் அதற்கு இடையிலும் அவர் வலைப்பக்கத்தில் எழுதிக் கொண்டுதான் இருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்...!

கே.ஆர்.பி செந்தில் மூலம்தான் கேபிள் அண்ணா எனக்கு அறிமுகமானார். கேபிளின் கடுமையான உழைப்பையும், திட்டமிடலையும், சினிமா பற்றிய அறிவையும் பற்றி அடிக்கடி அவர் சிலாகித்துப் பேசுவார். இணைய உலகில் கேபிளின்  சினிமா விமர்சனங்கள் வெகு பிரலபமானது. ஒரு திரைப்படம் சரியாய் இல்லை என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கிழித்து தொங்க விட்டு விடுவார். சினிமா விமர்சனம் எழுதியவர், கதைகள் கவிதைகள், கட்டுரைகள், என்று எழுதியவர் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறாரே....அதெல்லாம் அவருக்கு சரியாய் வருமா என்ற நிறைய பேர்களின் நினைப்பை...புட்பாலாக்கி ஸ்ட்ரெய்ட்டாக கோல் அடித்து பரபபரப்பை உண்டாக்கியது தொட்டால் தொடரும் படத்தின் முதல் டீசர் பாடல்.

சமகால இளையர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் எதை ரசிப்பார்கள் என்பதை இளைஞர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு சமூகப் பிரச்சினைகளை பார்க்கும் ஒருவரை விட வேறு யாரால் தெளிவாய்ச் சொல்லி விட முடியும்.....?

கேபிள் சங்கர் 100 படங்களுக்கு உதவி இயக்குனராய் பணியாற்றி சினிமா மரபுகளையும் இன்ன பிற தயவு தாட்சண்யங்களையும் பின்பற்றி தன்னை அதற்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு இயக்குனர் ஆனவர் அல்ல....


அவர் 1000க்கும் மேற்பட்ட படங்களை ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து பார்த்து  ரசிகனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை தெளிவாய் அறிந்து வைத்திருப்பவர். என்னைப் போன்ற வலைப்பதிவர்களுக்கு எல்லாம் வலைப்பதிவர்களின் முன்னோடியான கேபிள் சங்கர் படம் இயக்கப் போகிறார்  என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து ரஜினி புதுப்படம் அறிவித்ததைப் போலத்தான் இருந்தது. தொட்டால் தொடரும் படத்தின் செய்திகள் இணையத்தில் வரும்போதெல்லாம் வெகு ஆவலாய் அதைப் பார்ப்பதும் படிப்பதுமாய் இருந்த எங்களுக்கு வெகு சீக்கிரமே படம் வெளியாகப் போகிறது என்ற செய்தி வெகு இனிப்பனதுதான்.

தொட்டால் தொடரும் படத்தின் பாடல்கள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் அந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. பட்டாசு வெடிப்பதற்கு முன்பு திரி பற்றிக் கொள்ளுமே சர...சரவென்று....அதே வேகத்தில் படத்தின் ஷாட்களும், பின்னணி இசையும், வசனங்களும் ஸ்க்ரீனில் பரபரக்க....பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குள்ளும் பற்றிக் கொள்கிறது அந்தப் பொறி....!

ஒரு வெற்றிப்படத்திற்குரிய சகல குணாதிசயங்களுடன் வெளியாகி இருக்கும் தொட்டால் தொடரும் பாடல்களும், ட்ரைலரும்  இணையத்தில் இப்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன...! 


தொட்டால் தொடரும் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து அண்ணன் கேபிள் சங்கர் எட்ட முடியாத உயரங்களை எல்லாம் எட்டிப் பிடிக்க  எனது அன்பான வாழ்த்துகள்...!


தேவா சுப்பையா...





Viewing all articles
Browse latest Browse all 254

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>